TamilsGuide

சவுதி அரேபியத் தூதரைச் சந்தித்துக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

இலங்கைக்கான சவுதி அரேபியா தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திராவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (15) வெளியுறவு அமைச்சகத்தில் இக்  கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment