நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


