இலங்கையில் சில வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் திட்டமிட்டு ஓரினச் சேர்க்கை தொடர்பான திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் சில ஆபத்தான செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே தாம் ,இதனைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” “சில வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் உரிமைத் திட்டங்கள் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்படுகின்றன. அந்த அமைப்புகள் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பிரசாரம் நிகழ்த்தி வருகின்றன.
திருமண கலாசாரத்தை அழிக்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் இரகசியமாக செயல்படுத்தப்படுகின்றன.சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் இந்த திட்டத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர். இந்த நிலைமை நமது நாட்டின் எதிர்காலத்திற்கும், கலாசாரத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” இவ்வாறு மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


