TamilsGuide

மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து! 7 பேர் காயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (15) காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பேருந்தின் பிரேக், செயலிழந்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 

Leave a comment

Comment