TamilsGuide

கனடாவில் பாரியளவில் சைபர் தாக்குதல்கள்

கனடாவில் இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 12 பில்லியன் சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பர்னபியில் உள்ள ஃபோர்டினெட்டின் பல்கலைக்கழகத்தில், இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தினமும் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் இப்போது வேகமாகவும், அதிநவீனமாகவும் செயல்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனடாவை இலக்காகக் கொண்டு சுமார் 12 பில்லியன் இணையத் தாக்குதல்களை ஃபோர்டினெட் பதிவு செய்ததாக நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு உத்தியாளர் டெரெக் மான்கி தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒவ்வொரு நாளும் இருண்ட வலையில் (டார்க் வெப்) உள்ளோம், அச்சுறுத்தல்களைத் தேடுகிறோம், அந்த பாதுகாப்புகளை உருவாக்குகிறோம் என மான்கி தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், பல்வேறு துறைகளில் சைபர் தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் உதவியையும் பயன்படுத்தி இவ்வாறான சைபர் தாக்குதல்களை முறியடிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment