கனடாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் 'உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இடைக்காலத் தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு நிறுவப்பெற்ற 'உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்' தற்போது உலகில் பல நாடுகளில் கிளைகளை அமைத்து இயங்கிவருகின்றது.
அதன் தலைமையகம் கனடாவில் இயங்கியவண்ணம் கனடிய அரசாங்கத்திலும் பதிவு செய்யப்பெற்ற கலாச்சார மேம்பாட்டு அமைப்பாக விளங்குகின்றது.
கனடாவில் இயங்கும் தலைமைகத்தின் இடைக்காலத் தலைவராக பணியாற்றிய நடா ராஜ்குமார் அவர்கள் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை தலைமைகத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தார்.
இதனால் வெற்றிடமாக வந்துள்ள மேற்படி தலைவர் பதவிக்கு இயக்கததின் நீண்ட கால உறுப்பினரும் பல ஆண்டுகாலமாக கனடாவில் வாழ்ந்தவண்ணம் பல நற்பணிகள் செய்து வருபவருமான சிவா கணபதிப்பிள்ளை அவர்களை தலைமையகத்தின் செயற்குழு ஏகமனதாக தேர்ந்தெடுத்தது.
இது இவ்வாறிருக்க. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிரந்தரத் தலைவர் தெரிவு இயக்கத்தின் மாநாடு நடைபெறும் தினத்தன்று இடம்பெறும். அது வரையில் இயக்கத்தின் இடைக்காலத் தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை பதவி வகிப்பார் என்று அறியப்படுகின்றது.


