TamilsGuide

50 ஆண்டுகள்.. என் அன்பு நண்பர் ரஜினியின் சினிமா பயணத்தை கொண்டாடுகிறேன்- கமல்

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தை நான் கொண்டாடுகிறேன். நம் சூப்பர் ஸ்டார் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும், பெருமையையும் தெரிவித்து, அவரது பொன்விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

அசுர பலம் கொண்ட லோகேஷ் கனகராஜ் இயக்கி, நம் திரையுலகின் தூணாக விளங்கும் கலாநிதி மாறன் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், என்றும் புதுமைகளை புகுத்தும் அனிருத் இசையில், எனது நீண்ட நாள் நண்பர்களான சத்தியராஜ், நாக அர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, மற்றும் சௌபின் சாகிர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எனது வாழ்த்துக்கள். எனது அன்பான மகள் சுருதி ஹாசனுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பிரகாசமாக ஜொலிப்பாய்.

என்று கமல்ஹாசன் கூறினார்.
 

Leave a comment

Comment