நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தை நான் கொண்டாடுகிறேன். நம் சூப்பர் ஸ்டார் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும், பெருமையையும் தெரிவித்து, அவரது பொன்விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசனின் பதிவிற்கு கூலி படத்தின் இயக்குனநர் லோகேஷ் கனகராஜ் Love you ஆண்டவரே என பதிவிட்டுள்ளார்.


