அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ட்ரேசி ஆர்ம் என்ற பகுதி உள்ளது.
இங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு மலையின் ஒரு பெரிய பகுதி கடலில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 100 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சுனாமி அலைகள் உருவாகி கடற்கரை பகுதிகளை மூழ்கடித்தன.
இது ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானது முதல் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.


