TamilsGuide

வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்தின் திகதியில் மாற்றம்

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் முன்னதாக திட்டமிடப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டம் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment