நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும். டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
நார்த் அமெரிக்காவில் ப்ரீ புக்கிங்ஸ் மட்டுமே 2 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாயாகும். ஒரு தமிழ் திரைப்படத்திற்கு முன்பதிவின் வழியாக இவ்வளவு அதிகமான வசூல் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது


