மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
ஆதவன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு குறித்த விவகாரம் தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது ” நாளை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது மன்னார் காற்றாலை மின் திட்ட விவகாரம் தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் நாளை 13 ஆம் திகதி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


