TamilsGuide

கந்தளாய் – சின்ன குளம் பகுதியில் கைக்குண்டு மீட்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சின்ன குளம் பகுதியின் கரையோரத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு,மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment