TamilsGuide

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தது.

இதனை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (12) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 

Leave a comment

Comment