நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த One Piece என்ற பிரபல அனிமே பிராஞ்சைஸின் லைவ்-ஆக்ஷன் வடிவம் மீண்டும் நெட்பிளிக்ஸில் வர உள்ளது. உலகம் முழுவதும் அபார வரவேற்பைப் பெற்ற முதல் சீசனுக்குப் பிறகு, இந்த தொடரின் இரண்டாம் சீசனை படக்குழு படமாக்கினர். இந்நிலையில் இரண்டாம் சீசனின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இரண்டாம் சீசன் அடுத்தாண்டு வெளியாக இருப்பதாகவும். அதோடு மட்டும் நிறுத்தாமல் தொடரின் சீசன் 3 -யும் படமாக்கப்பட்டு வருவதாக அறிவிப்பை கொடுத்துள்ளனர். இதனால் ஒன் பீஸ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்த அறிவிப்பு, ஜப்பானின் டோக்கியோவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் One Piece Day விழாவில் வெளியாகியது. இதன் மூலம், Eiichiro Oda உருவாக்கிய புகழ்பெற்ற மங்காவின் பயணம் மீண்டும் ரசிகர்களிடம் உயிர் பெறுகிறது.
புதிய சீசனின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பட்டியல் மாற்றமடையுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.


