தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கதப்பாத்திரத்திற்கு ஜடல் என பெயர் வைத்துள்ளனர்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'பேரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது அதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் நானி இரட்டை ஜடை போன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கிறார்.
அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது


