ஜெர்மன் நாட்டில் கேவலார் என்ற இடத்தில் அன்னை மரியாவின் காட்சி 1641ஆம் ஆண்டு இடம்பெற்றிருக்கிறது. மரியன்னையின் பரிந்துரையைப் பலரும் இவ்விடத்தில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தலத்திற்கு ஜெர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் இவ்வாண்டு தனது 37வது திருப்பயணத்தை 08-09.08.2025 அன்றைய தினங்களில் ஏற்பாடு செய்திருந்தது.
மிகவும் நேர்த்தியான, அழகான முறையில் ஆன்மீக பணியகத்தின் இயக்குநர் அருட்பணி. தா. நிருபன் அடிகளாரும் புலம்பெயர் ஜெர்மன் உறவுகளும் ஒழுங்கு செய்யதிருந்தார்கள்.
புலம்பெயர் மக்களின் ஆன்மிக தாகத்தை இங்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாண்டு யாழ். மறைமாவட்ட ஆயர், சுமார் 40 அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விடத்திற்கு தமிழ்க் கத்தோலிக்க இறைமக்கள் மட்டுமல்லாது இந்துசமய சகோதர சகோதரிகளும் பெருமளவில் கூடிவந்து இவ்விழாவில் இணைந்து கொள்வதும் சிறப்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - அருட்பணி. செ. அன்புராசா அமதி


