TamilsGuide

பிரான்சில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாரிய காட்டுத் தீ

பிரான்ஸின் தெற்கு மற்றும் தென்-மேற்கு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸில் அண்மைக்காலமாக  நீடித்து வரும் கடும் வெப்பநிலை, நீண்டகால வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகின்றன.

இதனால்  ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் காடுகள் , விவசாய நிலங்கள் மற்றும்  வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

அதே சமயம்  ஆயிரக்கணக்கான மக்கள் தமது குடியிறுப்புகளை விட்டு வெளியேறி தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேநேரத்தில், கிரீஸ், இத்தாலி, பொற்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும் காட்டுத்தீ பரவி வருவதால், தென் ஐரோப்பா முழுவதும் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள், காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்த வெப்பநிலை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment