தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு அது மக்களின் கவனத்தை பெற்றது.
படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார். படத்தின் இசையை பீம்ஸ் செசிரொலியோ மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான ஒலே ஒலே வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் ஆக்ஷன் மற்றும் காமெடி , காதல் என அனைத்து விதமான காட்சிகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவை மேற்கொள்ள நவின் நூலி படத்தொகுப்பை செய்துள்ளார்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது.


