TamilsGuide

50 லட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது

50 லட்சம் ரூபாய் பெறுமதியான  திமிங்கலத்தின் வாந்தி எனப்படும்  அம்பர் கிரிஸை  (Ambergris)  வைத்திருந்த குற்றச்சாட்டியில் நபர் ஒருவரை  திவுலபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த குறித்த நபரிடமிந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment