காலி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவாப்பட்டை பதப்படுத்தும் மையங்களுக்கு 2.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கறுவாப் பொருட்களின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அறுவடையின் பின்னர் கறுவாப்பட்டை உற்பத்திகளின் தொழில்நுட்ப செயல்முறையை நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பதற்கும் ஆறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கறுவாப்பட்டை இலை எண்ணெய் எடுக்கும் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக 1.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கறுவாப்பட்டை உலர்த்தும் இயந்திரமும் இதன் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


