TamilsGuide

அமெரிக்காவில் வீடொன்றில் வீழ்ந்த பூமியை விட பழமையான விண்கல்

அமெரிக்காவில் உள்ள வீடொன்றில் பூமியை விட மிகவும் பழமையான விண்கல் வீழ்ந்துள்ளது.

குறித்த விண்கல் பூமியில் வீழ்வதற்கு முன்பாக வான் பரப்பில் பறந்து சென்றதாக நாசா குறிப்பிடுகிறது.

இந்த விண்கல்லை ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகளின் படி அது, 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 

Leave a comment

Comment