TamilsGuide

ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து ஹைவே 401 கிழக்கு நோக்கி செல்லும் பாதையில் ஹைவே 410க்கு செல்லும் மேம்பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒற்றை வாகனம் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்பதுடன் இதில் 23 வயது பெண் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் பயணம் செய்த 25 வயதான பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பாதை மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a comment

Comment