நிவின் பாலி நடித்த நியாண்டுகலுடே நாட்டில் ஒரிடவெலா படத்தின் மூலம் சிறப்பாக அறிமுகமான ஆல்தாஃப் சலீம், அடுத்ததாக ஓடும் குதிரா சாடும் குதிரா படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த காதல்-காமெடி திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் "கோட்டா ஃபாக்டரி"நடிகை ரேவதி பிள்ளை, வினய் ஃபோர்ட், லால், சுரேஷ் கிருஷ்ணா, லக்ஷ்மி கோபாலஸ்வாமி, வினீத் தட்டில் டேவிட், பாபு ஆண்டனி, நோபி மார்கோஸ், வினீத் வசுதேவன், சாஃப்பாய், அனுராஜ் ஓபி, அமித் மோகன் ராஜேஸ்வரி, வர்ஷா ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: கூலி : டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல்!
தொழில்நுட்ப குழு
ஒளிப்பதிவு – ஜின்டோ ஜார்ஜ்
எடிட்டிங் – நிதின் ராஜ் அரோல்
இசை – ஜஸ்டின் வர்கீஸ்
ஆர்ட் டிசைன் – அஷ்வினி காலே
"ஓடும் குதிரா சாடும் குதிரா" படத்தை தவிர, கல்யாணி நடிப்பில் "லோகா Chapter 1: சந்திரா" இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் ஓணம் பண்டிகைக்கு மோகன்லால் – சத்யன் இணைந்த **"ஹ்ருதயபூர்வம்"** (ஆகஸ்ட் 28) மற்றும் ஹ்ரிது ஹரூன் இயக்கிய **"மைனே ப்யார் கியா"** (ஆகஸ்ட் 29) வெளியாக இருக்கிறது.


