இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள், மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி 9வது நாளாக கிளிநொச்சியில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாம் வருடத்திற்கான 100 நாள் செயல்முறையின், 9வது நாள் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது சமஷ்டியை வலியுறுத்தும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை, இன மத பேதம் என்ற கோஷத்திற்குப் பின்னால் மறைக்கமுடியாது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


