தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தன் தொடக்க காலத்திலிருந்து ஒப்பந்தங்களில் 'நோ-கிஸ்' என்ற விதிமுறையை கடைபிடித்து வந்தவர். அதாவது அவர் நடிக்கும் எந்த படங்களிலும் முத்த காட்சிகள் இடம் பெற்றிருக்காது. அப்படி இருந்தாலும் அவர் நடிக்க மாட்டேன் என்ற ஒப்பந்துத்துடன் தான் படத்தில் கமிட்டாவார்.
ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் லஸ்ட் ஸ்டோரிஸ் வலைத் தொடர் மூலம் அந்த விதிமுறையை முறித்தார்.. அதில் அவர் முத்த மற்றும் நெருக்கமான காட்சிகளில் ஈடுப்பட்டிருப்பார்.
அதை தொடர்ந்து வந்த சில வெப் தொடர்களிலும் தொடர்ச்சியாக செக்ஸியான காட்சிகளில் நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், ஹிந்தி நிகழ்ச்சி லல்லன்டாப் பேசிய தமன்னா, "நான் நடிகையாக சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டதால், சவாலான கதாபாத்திரங்களை, வலுவான படங்களை தவறவிட்டேன் என்ற உணர்வு வந்தது. அந்த காரணத்தால் தான் எனக்கு நான் விதித்துக் கொண்ட 'நோ-கிஸ்'கண்டிஷனை உடைக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்தும் 100% போலியானவை, முழுவதும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை படப்பிடிப்பில் intimacy coach இருப்பார், அவர் நடிகர்களுக்கு எந்த இடங்களைத் தொடக்கூடாது என முன்கூட்டியே விளக்குவார். அவர் கூறியது படி தான் நடிப்போம், நாங்கள் அனைத்தையும் படக்குழுவினர் இடையே ஒரு நடனம் ஆடுவது போல் பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்சை பின்பற்றுவோம்" என்று தமன்னா கூறினார்.
இப்போது, தமன்னா தனது ரசிகர்களிடம் "கதையின் தேவைக்கேற்ப, நம்பகத்தன்மையுடன் நடித்தால் தான் உண்மையான நடிகை என நினைக்கிறேன்" எனும் வலுவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


