ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.
இதனை தொடர்ந்து படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கியாரா அத்வானி, இந்த படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து தணிக்கை குழு படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். கியாரா நடித்துள்ள 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். அதன்படி இந்தி மொழியில் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 53 நிமிடங்களாக ஆகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 51 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


