பான் இந்தியா இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்காக ரூ.50 கோடி செலவில் பிரம்மாண்டமான காசி நகர செட் ஒன்றை ஐதராபாத்தில் உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.VFX மற்றும் CGI தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில், நம்பகத்தன்மைக்காகவும், படப்பிடிப்புக்காக அடிக்கடி பயணங்களைத் தவிர்க்கவும் ராஜமௌலி இந்த பழைய பாணி செட் அமைக்கும் முறைக்குத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று மகேஷ் பாபு அவரது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் படக்குழு ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.


