இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் 'புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1985-ம் ஆண்டு வெளியான 'உதய கீதம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிஸ்கோ சாந்தி, 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக, கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். சில காரணங்களால் 1997-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அவர் ஒரு சூனியக்காரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் புல்லட் படத்தில் டீசரை எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.


