TamilsGuide

பொரளை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் உயிரிழப்பு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment