TamilsGuide

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் ஏற்றுமதி 7% உயர்வு

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கை ஏற்றுமதியில் 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுள்ளது எனவும் இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாகும் எனவும்  இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைத்  (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது  ”அரசாங்கம் இந்த ஆண்டில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியை இலக்காக வைத்துள்ளது எனவும் ஆண்டின் இரண்டாம் பாதியில் 8-10% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அத்துடன்  முக்கிய துறைகளுக்கு ஊக்கம் அளித்து புதிய சந்தை வாய்ப்புக்களைத்  திறக்கும் நோக்கத்துடன் ஒரு புதிய ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment