Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது".
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகை வர்ஷிணி வெங்கட் பேசியதாவது…
சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும் அதே நேரம் எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நாயகி ஆகும் கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு மிகப்பெரியது அவர்களுக்கு நன்றி. இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் S ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப்பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் அவன் மிகச்சிறந்த எழுத்தாளர், அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள். அனைவருக்கும் நன்றி.


