TamilsGuide

77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடி பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து, நேற்று கிரிபத்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின் போது, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, 1 கிலோ 50 கிராம் மற்றும் 500 கிராம் குஷ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள்  கடத்தல் மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள், மற்றும் ஒரு டிஜிட்டல் தராசு ஆகிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment