TamilsGuide

கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகமொன்று தற்போது கவனிப்பார் அற்றநிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் தவிசாளர் பாரூக்கின் முயற்சியினால்  குறித்த  நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்ற இந்த பகுதியில், குறித்த  நூலகம் கல்விக்கான ஓர் முக்கியமான ஆதாரமாக விளங்கி வருகின்றது.

இந்நிலையில் மூன்று வருடங்களாக கந்தளாய் பிரதேச சபையின் ஊடாக பத்திரிகை விநியோகம் மட்டும் வழங்கப்பட்டாலும், நிரந்தர ஊழியர் நியமிக்கப்படாத காரணத்தினால் நூலக செயற்பாடுகள் அற்றநிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment