TamilsGuide

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு, 2028ல் நடக்கும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பெரும்பாலும், துணை ஜனாதிபதியாக உள்ள ஜே.டி.வான்ஸ் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் 22வது சட்டத்திருத்தின்படி ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும். ஒருவரின் மறைவால் அல்லது பதவி விலகலால் குறுகிய காலம் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரால் மேலும் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்.

அந்த வகையில் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்றார். 

இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் பேட்டியொன்றில் அப்போது, ஜனாதிபதியாக தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட விருப்பம் உள்ளது; ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.

அதனால் குடியரசு கட்சியின் வேட்பாளராக, வான்ஸ் நிறுத்தப்படலாம். அவர் துணை அதிபராக இருப்பதால், அது நியாயமாகவும் இருக்கும். அவர் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் அதை முடிவு செய்ய இன்னும் நேரம் உள்ளது,” என்றார்.
 

Leave a comment

Comment