TamilsGuide

23 ஆண்டுகளுக்கு பின்பு - ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ்

இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.

முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால இப்படம் அப்போது வெளியாகவில்லை. இப்போது புதுப்பொலிவுடன் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment