TamilsGuide

அமெரிக்க ஓட்டலில் டிஜிட்டல் வரவேற்பாளர்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்ய முடிகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டல் மியாமி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.

அப்போது பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளை கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மக்கள் இந்த இடங்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் பலர் வேலைகள் இழக்க நேரிடும் என பதிவிட்டனர். அதே நேரம் சிலர் இந்த முயற்சியை பாராட்டினர்.

Leave a comment

Comment