TamilsGuide

114 வயதில் ஜப்பானின் மிக வயதான பெண்மணியான முன்னாள் மருத்துவர்

ஜப்பானின் மிக வயதான பெண்மணியான மியோகோ ஹிரோயாசு 114 வயதில் இறந்த நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவருமான ஷிகேகோ ககாவா மிக வயதான பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 114.

1911 இல் டோக்கியோவில் பிறந்த அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், போரின் போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை தொடங்கினார்.

பின்னர் அவர் சொந்த மருத்துவமனையைத் திறந்தார். அங்கு மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். அவர் 86 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

டோக்கியோவில் நடைபெற்ற 2021 ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்திச் சென்ற ஷிகேகோ ககாவா, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

நீண்ட காலம் வாழ அவர்களுக்கு எந்த சிறப்பு வழக்கமோ அல்லது உணவு முறையோ இல்லை என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தனர்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுத்துகொள்வதாகவும் வேளை உணவருத்துவதாகவும் தெரிவித்தனர்.

ஷிகேகோ தனது இறுதி காலத்தை செய்தித்தாள்கள் படிப்பதிலும், சீட்டாட்டம் விளையாடுவதிலும், வரைவதிலும் கழிக்கிறார். 
 

Leave a comment

Comment