TamilsGuide

அமெரிக்காவில் மருத்துவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் உள்ள நவஜோ நேசனில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மருத்துவமனையை சேர்ந்தவர்கள், நோயாளி ஒருவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

பீச்கிராஃப் 300 வகையைச் சேர்ந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது எதிர்பாராத வகையில் விமானம் விபத்துக்குள்ளானது.

"விபத்து குறித்து அறிந்ததும் மனம் உடைந்தேன். இவர்கள் (மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள்) மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என நவஜோ நேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment