2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில் விவாதத்தின் இறுதியில் பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்படி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவோரு வாக்குகளும் அழிக்கப்படாத நிலையில் வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் விலகியிருந்துள்ளார்.
இதன்படி,பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோன் சற்றுமுன்னர் நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த பிரேரணை மீதான வாக்களிப்பிலிருந்து பொதுஜன பெரமுண விலகி இருக்குமென என்று நாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


