சிவா, ஆண்டனி கிரேஸ், அஞ்சலி, மிதுன் ரியான் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'பறந்து போ'. கற்றது தமிழ், தரமணி ஆகிய புரட்சிகரமான படைப்புகளை இயக்கியவர் ராம். தங்க மீன்கள் மூலமாக அப்பா-மகள் உறவு, பேரன்பு மூலமாக மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தை-அப்பா உறவு ஆகியவற்றை காட்சிப்படுத்தி நெகிழ வைத்தவர்.
தற்போது இந்த படத்தின் மூலமாக அப்பா-மகன் உறவு குறித்து பேசியுள்ளார். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன்-நாயகி தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்கள். காதல் திருமணம் செய்த தம்பதியினர் நகர வாழ்க்கையை சமாளிக்க வேண்டிய சூழல். துறுதுறு மகனின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் எந்திரமய வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெற்றோர் மீது மகன் வெறுப்படைய நாயகன் எடுக்கும் முடிவுகள் தொடர்பான படம். யுவன் சங்கர் ராஜா இசையில் வெற்றிப் பெற்ற இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகிறது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


