ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெபுவன, ஹொரண, மதுகம மற்றும் அங்குருவாத்தோட்டை பகுதிகளில் இவ்வாறு ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் தெபுவன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தெல்கொட விகாரைக்கு அருகில் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே தெல்கொட விகாரைக்கு அருகில் வைத்து தெபுவன பிந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ‘தெபுவன பிந்து’வை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள தெபுவன பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெபுவனவின் கிரிமெட்டிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 310 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தொடர்பான மேலதிக விசாரணைகளை தெபுவன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


