TamilsGuide

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

லொறி ஒன்றில் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றில் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாகப் பெற்றபோது, குறித்த பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) மதியம் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி, வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 

Leave a comment

Comment