கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் மேலும் $3.7 பில்லியன் வருவாய் இலக்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் முன்னணியில் உள்ளனர்.
மேலும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத சுற்றுலாப் பயணிகளில் முன்னணியில் உள்ளனர்.
எனவே மதப் பயணத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் அரசாங்கம் ஆலயத்துக்கு மேலும் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுரா செனவிரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


