TamilsGuide

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை  பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்  நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து ஏராளமான பக்த அடியார்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத்  தலங்களை பார்வையிடவே அதிகமானோர்  நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம்,கோணேஷ்வர ஆலையம்,கதிர்காமம்,இது போன்ற புனிதஷ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர்.

எமது  பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.  இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு  பயணிகளை ஈர்க்க வேண்டும்  என்பதே  எமது இலக்காகும்.

தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள  இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

அதிகமான  அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும்  அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.

அத்துடன்  பல அபிவிருத்தி திட்டங்களை  நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment