ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதி சுமார் 19 செ.மீ (7.5 அங்குலம்) வரை சுனாமி அலைகளால் பாதிக்கப்படும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மற்றும் சுனாமி தாக்கத்திற்குரிய பகுதிகளில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


