71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை ஹரிஸ் கல்யான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.


