TamilsGuide

நான் கமல் fan என்றார் லோகேஷ்: நீ யார் fan-னு நான் கேட்டனா? - ரஜினிகாந்த் கிண்டல்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "கைதி படத்தை பார்த்து லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்து பாராட்டினேன். எனக்கு எதாவது கதை வைத்துள்ளீர்களா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு இல்லாத கதையா சார். என்னிடம் கதை உள்ளது என்றார். அடுத்து நான் கமல் பேன் சார் என்று லோகேஷ் கூறினார். இது என்ன ராசியோ தெரியல... நெல்சன் எங்க வீட்டுக்கு வந்து நல்ல காபி கிடைக்குமா என்று கேட்கிறார். லோகேஷிடம் கதை கேட்டால் நான் கமல் பேன் என்கிறார்.

உன்ன நான் கேட்டனா ? இல்ல… நான் கேட்டனா ? நீ யார் பேன் னு நான் கேட்டனா ? அப்புறம் ஏன் ?" என்று கிண்டலாக தெரிவித்தார்.
 

Leave a comment

Comment