TamilsGuide

கந்தளாயில் நெற்பயிர்களுக்கு விஷம் தெளிப்பு - விவசாயி முறைப்பாடு

கந்தளாய், போட்டாங் காட்டுப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஐந்து ஏக்கர் நெற்பயிர்கள் மீது இனம்தெரியாதோரால் களைகொல்லி விஷம் தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும், விவசாயத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இந்த வயல் நிலத்தை, தற்போதைய சிறுபோக நெற்செய்கைக்காக விவசாயி ஒருவர் குத்தகைக்கு எடுத்துப் பயிர்செய்து வந்த நிலையிலேயே இந்த நாசகாரச் செயல் அரங்கேறியுள்ளது.

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தானத்திற்குரிய இந்த வயல், கடந்த காலங்களில் கோவிலுக்குத் தொண்டாற்றும் அடியார்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த விவசாயி இம்முறை சிறுபோகத்திற்காக இதைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நெற்செய்கையில் ஈடுபட்டதாகவும் இவ்வாறான சூழலில் இந்த செயல் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி விசனம் வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment