TamilsGuide

திருகோணமலையில் வீடு புதுப்பித்தலுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தலைமையில் வறுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கான வீடு புதுப்பித்தலுக்கான உதவி தொகை வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு, வீடு புதுப்பித்தலுக்காக தலா 100,000 ரூபாய் வீதம், வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (02) நடைபெற்றது.

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் பங்கேற்புடன் உதவி திட்டம் வழங்கப்பட்டது.

இந்த உதவி பிராந்திய வீட்டுவசதி ஆணையத்தால் ஒதுக்கப்பட்டு, தேவைப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் படியாக குறித்த திட்டம் கருதப்படுகிறது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment